Cinema
இது மிகப்பெரிய கோழைத்தனம்… நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது குறித்து பிரபல நடிகை காட்டம்….!!!!
கேரளாவில் நடிகைகள் அடுத்தடுத்து பாலியல் புகார் அளித்து வரும் நிலையில் நடிகர் சங்க தலைவர் மோகன்லால் மற்றும் நிர்வாகிகள் உட்பட அனைவரும் ஒரே சமயத்தில் ராஜினாமா செய்தனர். இதனை தொடர்ந்து நடிகர் சங்கமும் கலைக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பிரபல நடிகை பார்வதி, “நடிகர் சங்கம் கலைக்கப்பட்டதை கோழைத்தனமான விஷயமாக பார்க்கிறேன். ஒரு பொறுப்பான நிலையில், இருந்த அவர்கள் இப்படி ஒரு முடிவை எடுத்து இருப்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. பதில் சொல்ல முடியாமல் தான் அவர்கள் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார்கள். பிரச்சனைக்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை என்றாலும் கூட அரசாங்கத்துடன் இணைந்து இந்த பிரச்சினைகளை தீர்க்க நடிகர் சங்கம் ஒரு சிறிய முயற்சியையாவது செய்திருந்தால் சரியாக இருந்திருக்கும்” என கூறியுள்ளார்.