General
விஜய் கட்சியில் நான் ஏன் சேர வேண்டும்…..??? ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா அதிரடி….!!!!
ஆந்திர மாநிலத்தில் கடந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த சமயத்தில் சுற்றுலாத்துறை இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகித்தவர் தான் பிரபல நடிகை ரோஜா. இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து ரோஜா நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரோஜா கூறியிருப்பதாவது, “இது தெலுங்கு தேச கட்சியின் பொய் பிரச்சாரம். நான் ஏன் விஜய் கட்சியில் இணைய வேண்டும்? எனக்கு விஜய் அவ்வளவு நெருக்கம் கூட இல்லை. சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் கட்சியை தொடங்கிய போது கூட சிரஞ்சீவி நான் அக்கட்சியில் சேரவில்லை. அப்படி இருக்கும்போது விஜய் கட்சியில் ஏன் சேரப்போகிறேன்? நான் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியிலேயே தான் நீடிப்பேன். வேறு எந்த கட்சியிலும் சேர மாட்டேன்” என மிகவும் உறுதியாக கூறியுள்ளார்.