Cinema
எனக்கு தமிழ் பிடிக்கவே பிடிக்காது… இங்க மரியாதையே இல்ல…. பிரபல நடிகையின் பேச்சால் வெடித்த சர்ச்சை!
தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் சங்கீதா. இவர் சமீபத்தில் கலா மாஸ்டர் உடனான பேட்டி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அப்போது கலா மாஸ்டர் இவரிடம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் நடித்திருக்கிறாய், உனக்கு மிகவும் பிடித்த மொழி எது? தமிழ் உனக்கு பிடிக்கும் அதுதவிர வேறு என்ன மொழி என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சங்கீதா, “தமிழ் எனக்கு பிடிக்காது. எனக்கு தெலுங்கு தான் பிடிக்கும். நான் தெலுங்கில் தான் அதிக படம் பண்ணீட்டு இருக்கிறேன். இதை பார்த்து எத்தனை பேர் கோபப்பட்டாலும் பரவாயில்லை. தெலுங்கில் கொடுக்கும் ரெஸ்பெக்ட் தமிழில் கிடைப்பதில்லை” என கூறியுள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் பலரும் அப்போ தெலுங்குக்கே போயிடுங்க இங்க ஏன் இருக்கீங்க என அவரை விளாசி வருகிறார்கள்.