
Cinema
பிக்பாஸ் கேட்ட கேள்வி…. தமிழில் பதிலளித்த ஸ்ருதிகா… கவனம் பெறும் ஹிந்தி பிக்பாஸ்….!!!!
தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ படம் மூலம் அறிமுகமானவர் தான் ஸ்ருதிகா அர்ஜூன். இவர் அந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஆனால் இவரின் படங்களுக்கு சரியான வரவேற்பு இல்லாததால் சினிமாவை விட்டு விலகி படிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

#image_title
இதற்கிடையில் திருமணம் குழந்தை என்றாகி விட்டதால் முழுவதும் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். சமீபத்தில் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக வந்து மீடியாவில் கம்பேக் கொடுத்தார் ஸ்ருதிகா. இவரின் நகைச்சுவையான பேச்சு மற்றும் குழந்தைத்தனம் காரணமாக இவருக்கு பெரியளவில் ரசிகர்கள் உருவாகினார்கள்.
இப்படி உள்ள சூழலில் தான் தற்போது ஸ்ருதிகா ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 18-ல் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இவர் நுழைந்த முதல் நாள் முதல் தனது காமெடியான பேச்சால் கண்டென்ட்டாக மாறியுள்ளார். தினமும் எப்படியாவது ப்ரோமோவில் இடம்பிடித்து விடுகிறார்.

#image_title
இந்நிலையில் தான் நேற்று ஸ்ருதிகா தனது சக போட்டியாளர்களுடன் பேசி கொண்டிருக்கும் போது பிக்பாஸ், “ஸ்ருதிகா என்ன பண்றீங்க” என கேட்டுள்ளார். அதற்கு ஸ்ருதிகா தமிழில், “சும்மா பேசிட்டு இருக்கோம்” என பதிலளித்துள்ளார். இதனால் குழம்பிய பிக்பாஸ் சும்மாவா அப்படினா என்ன என்று விளக்கம் கேட்க ஸ்ருதிகாவும் அழகாக ஹிந்தியில் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் தமிழ் ரசிகர்கள் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக ஹிந்தி பிக்பாஸ் பக்கம் திரும்பியுள்ளது. மேலும் சிலர் ஸ்ருதிகா தமிழ் பிக்பாஸ் வந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.