Cinema
த்ரிஷா திருமணம் நின்று போன காரணம் இதுதான்…. மனம் திறந்த த்ரிஷாவின் தாயார்….!!!
நடிகை த்ரிஷா பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட 40 வயதாகியும் அவரின் அழகும் இளமையும் அப்படியே இருக்கும் காரணத்தால் இன்றும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

#image_title
நடிகை த்ரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருந்து வரும் நிலையில், நிச்சயம் வரை சென்று அவரது திருமணம் நின்று போனது குறித்து ஏராளமான செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து த்ரிஷாவின் அம்மா விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி திரிஷா- வருண் மணியன் திருமணம் நின்று போனது குறித்து அவரின் தாயார் கூறியிருப்பதாவது, “த்ரிஷாவின் திருமணம் குறித்து அவங்களுக்கு தோன்றத இஷ்டத்துக்கு எழுதுறாங்க. த்ரிஷா திருமணத்துக்கு அப்புறம் நடிக்கறது பிடிக்காம தான் கல்யாணத்தை நிறுத்தினதா சொல்றாங்க.

#image_title
ஆனா அதுல துளி கூட உண்மை இல்லை. த்ரிஷா சினிமால நடிக்கிறது தெரிஞ்சு தான் பெண் பார்க்க வந்தாங்க. கல்யாணத்துக்கு பிறகும் நடிக்கலாம் என திரிஷாவை வருண் என்கரேஜ் செய்து கொண்டிருந்தார். அதுதான் உண்மை. அதுமட்டுமில்லாம திரிஷா சினிமால நடிக்கிறத அவங்க குடும்பத்தோட பெருமையா தான் நினைச்சாங்க.
நிச்சயம் முடிந்த பிறகு கூட நிறைய புது படங்களுக்கு திரிஷா தேதி கொடுத்து இருந்தார். ஒருவேளை கல்யாணத்துக்கு பிறகு திரிஷா நடிக்க கூடாது என வருண் குடும்பத்தினர் சொல்லி இருந்தால் நாங்க புது படத்தை எப்படி கமிட் செய்திருக்க முடியும்? த்ரிஷா கல்யாணம் நின்று போன விஷயத்தில் பெரியவங்க பலர் சம்பந்தப்பட்டிருக்காங்க.

#image_title
அவங்க எல்லார் மேலயும் எனக்கு நல்ல மரியாதை இருக்கு. அதனால சில விஷயங்களை வெளிப்படையா பேச முடியாது, பேசுவது நாகரிகமும் இல்லை. நாங்கள் ஏதாவது சொல்ல போய் அதை வேற மாதிரி எழுதிடறாங்க. சில விஷயங்கள் சரிப்பட்டு வராதபோது பிரிந்து விடுவது தான் பெட்டர்” என கூறியுள்ளார்.