Cinema
பிறந்த நாள் அன்று விஜய்யின் சாய் பாபா கோவிலுக்கு சென்ற த்ரிஷா…!!!!
தமிழ் சினிமாவில் 40 வயதாகும் இளமையாக காட்சியளிக்கும் நடிகை த்ரிஷா சமீபத்தில் அவரின் 41வது பிறந்த நாளை கொண்டாடி இருந்தார். அவரை பார்த்தால் நிச்சயம் அவருக்கு 41 வயது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு இளமை குறையாமல் காணப்படுகிறார்.

#image_title
தற்போது அஜித்தின் விடாமுயற்சி, கமலின் தக் லைஃப் மற்றும் தெலுங்கு, மலையாளம் இதுதவிர பாலிவுட் என அனைத்து மொழிகளிலும் பிசியாக நடித்து வரும் த்ரிஷா அவரின் பிறந்த நாளை மிகவும் எளிமையாக சாய் பாபா கோவில் ஒன்றில் கொண்டாடி உள்ளார்.
அந்த கோவில் நடிகர் விஜய் சமீபத்தில் அவருக்கு தாய் ஷோபனாவிற்காக கட்டிய சாய் பாபா கோவில் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஷீரடியில் உள்ள சாய் பாபா கோவிலில் பிறந்த நாளை கொண்டாடிய த்ரிஷா இந்த ஆண்டு நடிகர் விஜய் கட்டிய சாய்பாபா கோவிலில் கொண்டாடி உள்ளார்.

#image_title
அவரின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இதனை உறுதி செய்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பிறந்த நாள் அன்று சாய் பாபா கோவிலில் தரிசனம் செய்யும் த்ரிஷா இந்த ஆண்டு நடிகர் விஜய் கட்டியுள்ள கோவிலில் தரிசனம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.