General
வெளியே சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டுவார்…. பகீர் கிளப்பிய நடிகர் ராஜ்கிரண் வளர்ப்பு மகள்…!!!
பிரபல நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா பிரபல சின்னத்திரை நடிகர் முனீஸ்ராஜாவை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கடந்தாண்டு அவரை பிரிவதாக கூறிய பிரியா மீண்டும் தன் அப்பா அம்மாவிடமே வந்து விட்டார். இந்நிலையில் இதுகுறித்து தற்போது பேசியுள்ள பிரியா, “ஆரம்பத்தில் எனது அப்பா அம்மா என்னிடம் பேசவில்லை. ஆனால் சில நாட்களுக்கு பின்னர் என் அம்மா என்னிடம் பேச தொடங்கினார். உடனே முனீஸ்ராஜாவின் அம்மா உன் அம்மா தான் பேசுறாங்கள அவங்க கிட்ட 100 பவுன் நகை பணம் கேட்டு வாங்கிட்டு வா என்று என்னை டார்ச்சர் செய்ய தொடங்கினார்கள். வெளியே சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டுவார். கெட்டவார்த்தை சொல்லி தான் என்னை கூப்பிடுவாங்க. கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் தூக்கி அடிப்பாங்க. நீ பணம் வாங்கிட்டு வந்தா எங்கம்மா உன்னை அடிக்கமாட்டாங்க என முனீஸ்ராஜா கூறுவார். அதன் பின்னர் தான் நான் அவரை பிரிய முடிவு செய்தேன்” என்று கூறியுள்ளார்.