General
தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை….!!! எதற்காக தெரியுமா…???
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் நடைபெறவுள்ளன. இந்த தேர்வினை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 2,763 தேர்வு மையங்களில், 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் எழுத உள்ளனர். தேர்வர்கள் காலை 9 மணிக்கு முன்னரே தேர்வு மையத்திற்கு சென்று விடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பிறகு வரும் தேர்வர்களுக்கு எக்காரணத்திற்காகவும் அனுமதி கிடையாது என்றும் அறிவித்துள்ளனர். தேர்வு மையங்களில் பெரும்பாலானவை பள்ளிகள் என்பதால் நாளை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.