
General
அவரின் பேச்சு அவமானகரமானது…. மல்லிகார்ஜூன் பேச்சால் கடுப்பான அமித் ஷா…!!!
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது மயங்கி கீழே விழுந்தார். இதனை தொடர்ந்து மருத்துவர்கள் குழு அவருக்கு முதலுதவி செய்தது. இதுகுறித்து செய்தி அறிந்த பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தொலைபேசியில் அவரை அழைத்து உடல்நலம் குறித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் உடல்நலம்=- தேறிய பின்னர் கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜூன், “எனக்கு 83 வயதாகிறது. நான் அவ்வளவு எளிதில் இறக்கப்போவதில்லை. பிரதமர் நரேந்திர மோடி பதவியிலிருந்து நீக்கப்படும் வரை நான் உயிரோடு இருப்பேன்” என பேசியுள்ளார். இது பாஜகவினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கார்கேவின் இந்த பேச்சுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே அவர்களின் பேச்சு முற்றிலும் வெறுப்பு நிறைந்தது. அவமானகரமானது. வெறுப்பின் உச்சமாக, ‘பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றிய பிறகுதான் நான் இறப்பேன்’ என்று கூறி தேவையில்லாமல் தனது தனிப்பட்ட உடல்நல விஷயங்களில் பிரதமர் மோடியை இழுத்திருக்கிறார்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.