General
பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு போராடிய நடிகை…. பாலியல் மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்…!!!
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவ பயிற்சி மாணவி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்திற்கு திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலர் ஆதரவளித்து வருகிறார்கள். அந்த வகையில் மேற்குவங்கத்தை சேர்ந்த நடிகையும் முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியுமான மிமி சக்கரவர்த்தியும் இந்த போராட்டத்தில் பங்கேற்றார். இந்நிலையில் தனக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதாக மிமி அவரது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், “நாங்கள் பெண்களின் உரிமைக்காக நீதி கோருகிறோம். ஆனால், விஷத்தன்மை வாய்ந்த சில ஆண்கள் தங்களின் உண்மை முகத்தை மறைத்துக் கொண்டு, பெண்களுக்கான பாலியல் போராட்டங்களில், பெண்களுக்கு ஆதரவாக நிற்பதுபோல நடிக்கின்றனர்” என கூறியுள்ளார்.