Connect with us
   

Cinema

அம்மாவின் கடனுக்காக தான் நடிக்கவே வந்தேன்…. நடிகர் சூர்யா சொன்ன எமோஷ்னல் ஸ்டோரி….!!!!

தமிழ் சினிமாவில் மூத்த நடிகரும் தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படுபவருமான நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் தான் சூர்யா. இவர் தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

#image_title

இந்நிலையில் சூர்யா தான் எப்படி சினிமாவிற்குள் வந்தேன் என்பது குறித்து சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது “நான் ஒரு கார்மெண்ட் தொழிற்சாலையில் வேலை பார்த்து கொண்டிருந்தேன். அங்கு வேலை செய்தவர்களுக்கு நான் ஒரு நடிகரின் பையன் என்று தெரியாது.

நான் வேலைக்கு சேர்ந்த முதல் 15 நாட்களுக்கு 1500 ரூபாய் சம்பளம் வாங்கினேன். அதற்கு பின்னர் 3 ஆண்டுகள் அங்கு வேலை செய்ததால் என் சம்பளம் 8000 ரூபாயாக உயர்ந்தது. என் அம்மா ஒரு நாள் எனக்கு சாப்பாடு கொடுத்து வேலைக்கு அனுப்பும்போது அப்பாவுக்கு தெரியாமல் 25000 கடன் வாங்கி இருக்கிறேன் என்று சொன்னார்.

#image_title

என் அப்பா எப்போதும் அவரது சம்பளத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தவர் இல்லை. எங்கள் வங்கி கணக்கில் 1 லடசத்திற்கு அதிகமாக பணம் இருந்ததே இல்லை. சில நாட்கள் என் அப்பா 6 முதல் 10 மாசத்திற்கு வேலை இல்லாமல் இருந்திருக்கிறார். அப்போதான் எனக்கு மணிரத்னம் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதற்கு முன் என் கனவில் கூட நான் ஒரு நடிகனாவேன் என்று நினைத்தது இல்லை. அம்மா வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கதான் நான் நடிக்க வந்தேன்” என கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Continue Reading

More in Cinema

To Top