Connect with us
   

Television

10 ஆண்டுகளில் 4 அறுவை சிகிச்சை… பிரபல விஜய் டிவி தொகுப்பாளினிக்கு இப்படி ஒரு சோகமா…???

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்தவர் தான் திவ்யதர்ஷினி. இவரை ரசிகர்கள் டிடி என்று அழைப்பார்கள். இவர் இதுதவிர தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக காலில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக டிடி எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில்லை. இந்நிலையில் தனக்கு அறுவை சிகிச்சை நடந்திருப்பதாக டிடி கூறியுள்ளார். அதன்படி அவரது பதிவில், “கடைசி 3 மாதங்கள் எனக்கு கடினமாக இருந்தன. 2 மாதங்களுக்கு முன்பு எனது முட்டியில் மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனது வலது முட்டியில் கடந்த 10 ஆண்டுகளில் இது 4வது அறுவை சிகிச்சை. இதுதான் கடைசி அறுவை சிகிச்சையாக இருக்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன். என்னை திரையில் ரசித்த மக்களும் எப்போதும் ஆதரவு அளிக்கும் ரசிகர்களும் எனது வலியை புரிந்துகொள்வீர்களென இதை பதிவிடுகிறேன். இதுவரை எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. எனது கடினமான நாட்களில் உங்கள் அன்பும் ஆதரவும் தான் என்னை மீட்டது” என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமாக வேண்டுமென பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

Continue Reading

More in Television

To Top