General
80,000 உயிர்களை காப்பாற்றிய ஜெகன் மோகன் ரெட்டி…. நேரில் சந்தித்து நன்றி கூறிய மக்கள்…!!!
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 26 பேர் உயிரிழந்தனர். பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் நல்வாய்ப்பாக விஜயவாடாவின் கிருஷ்ணா லங்கா பகுதி மட்டும் பாதிப்பில் இருந்து தப்பிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்புச்சுவர் தான். ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது கிருஷ்ணா லங்கா பகுதியில் உள்ள 80,000 மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வந்தனர். எனவே தடுப்பு சுவர் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர். இதனை கருத்தில் கொண்டு ரூ.500 கோடி மதிப்பில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வெள்ள தடுப்பு சுவர் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார். இன்று அந்த தடுப்பு சுவர் தான் 80,000 மக்கள் உயிரை காப்பாற்றியுள்ளது. எனவே அப்பகுதி மக்கள் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.