General
நான் எவ்வளவோ சொல்லியும் கெஜ்ரிவால் கேட்கவில்லை…. அன்னா ஹசாரே ஆதங்கம்…!!!
டெல்லியில் முதல்வராக பதவி வகித்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து பல மதங்கள் போராடி தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஆனால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து பேசிய சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, “அரசியலுக்குள் நுழைய வேண்டாமென கெஜ்ரிவாலிடம் ஏற்கனவே பலமுறை கூறினேன். சமூக சேவையில் இருந்தே மக்களுக்கு நல்லது செய்யலாம் என்று தொடக்கம் முதலே அவரிடம் கூறி வருகிறேன். ஆனால் கெஜ்ரிவால் எனது பேச்சை கேட்கவில்லை. இப்போது நடந்திருப்பதை தவிர்க்க முடியாது. கெஜ்ரிவால் மனதில் என்ன உள்ளது என்பது தெரியவில்லை” என கூறியுள்ளார்.