General
கையெடுத்து கும்பிட்ட அண்ணாமலை! கை நீட்டி பேசிய உதயநிதி…. என்ன நடந்தது….!!!
கலைஞர் நூற்றாண்டு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழாவில் அமைச்சர் உதயநிதி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகிய இருவரும் பேசிய புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஏனெனில் அந்த புகைப்படத்தில் அண்ணாமலை உதயநிதியை பார்த்து கையெடுத்து கும்பிடுவது போலவும் உதயநிதி கை நீட்டி பேசுவது போலவும் உள்ளது. இதை பார்த்து பலரும் பல கதைகளை கூறி வருகிறார்கள். ஆனால் உண்மையில் இருவரும் சந்தித்தபோது பரஸ்பரம் வணக்கம் கூறிவிட்டு நலம் விசாரித்து பேசி கொண்டிருந்தனர். பின் இருவரும் சாதாரணமாக பேசி கொண்டிருக்கும்போது உதயநிதிக்கு பின்புறம் இருந்து பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் வந்துள்ளார். அவருக்கு அண்ணாமலை வணக்கம் வைக்கும் போது சரியாக போட்டோ எடுத்து அதை தவறாக சித்தரித்து வெளியிட்டு இருப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.