General
அன்னப்பூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்ட விவகாரம்….. பகிரங்க மன்னிப்பு கேட்ட அண்ணாமலை…!!!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் உணவுப்பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறித்து பிரபல அன்னப்பூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் கேள்வி எழுப்பி இருந்தார். அதனை தொடர்ந்து நேற்று அவர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கோரிய வீடியோ ஒன்று வெளியானது. இதனை கண்ட பலரும் கேள்வி கேட்டால் மிரட்டி மன்னிப்பு கேட்க வைப்பார்களா? இது பாசிசத்தின் உச்சம் என விமர்சிக்க தொடங்கினார்கள். இதனை தொடர்ந்து இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு பாஜக சார்பாக, மதிப்பிற்குரிய வணிக உரிமையாளருக்கும் எங்கள் மாண்புமிகு நிதியமைச்சருக்கும் இடையேயான தனிப்பட்ட உரையாடலை பகிர்ந்த எங்கள் செயல்பாட்டாளர்களின் செயலுக்காக நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அன்னபூர்ணா உணவக உரிமையாளரான சீனிவாசன் அவர்களுடன் நான் பேசினேன். இந்த எதிர்பாராத தனியுரிமை மீறலுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். இந்த விவகாரத்தை உரிய மரியாதையுடன் முடித்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.