
Cinema
விவாகரத்தில் விருப்பம் இல்லை…. சேர்ந்து வாழவே ஆசைப்படுகிறேன்… ஆர்த்தி வெளியிட்ட அதிரடி அறிக்கை….!!!
பிரபல நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாக்காக உள்ளது. தனது மனைவியை விவாகரத்து செய்வதாக ஜெயம் ரவி அறிவித்து இருந்தார். ஆனால் இதுகுறித்து தன்னிடம் எதுவுமே கலந்தாலோசிக்கவில்லை என ஆர்த்தி கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் விஷயத்தை பற்றி பலர் பேசி வருகின்றனர். நான் மெளனமாக இருப்பதால், எனது மௌனம் பலவீனமோ, குற்ற உணர்வின் அடையாளமோ அல்ல. நான் கண்ணியமாக இருப்பதால், உண்மையை மறைப்பதற்காக என்னை மோசமாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்குத்தான் இந்த அறிக்கை. சட்டத்தின் அடிப்படையில் எனக்கு நியாயம் கிடைக்கும் என நான் நம்புகிறேன். இந்த விவாகரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் தனிப்பட்ட முறையில் ஜெயம் ரவியை சந்தித்து பேச அனுமதி கேட்டும் இதுநாள் வரை அனுமதி கிடைக்கவில்லை. விவாகரத்து விஷயத்தில் அவருடன் தனிப்பட்ட முறையில் பேச காத்திருக்கிறேன்” என கூறியுள்ளார்.