
Cinema
விஜய்யோட அந்த படத்தை பார்த்து தூங்கிட்டேன்…. பிரபல நடிகை பேச்சால் கடுப்பான ரசிகர்கள்…..!!!!
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் விஜய்யின் நடிப்பு மற்றும் நடனத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விஜய்யை கொண்டாடி வரும் நிலையில், பிரபல நடிகை ஒருவர் விஜய் படத்தை பார்த்து தூங்கியதாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

#image_title
அந்த நடிகை வேறு யாருமல்ல தமிழில் அருவி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை அதிதி பாலன் தான். அந்த படத்திற்கு பின்னர் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் தொடர்ந்து தமிழ் மற்றும் பிற மொழிகளில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் நடிகர் விஜய் குறித்து பேசியதாவது, “நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை நான். வின்டேஜ் விஜய் தனக்கு ரொம்பவே பிடிக்கும். காதலுக்கு மரியாதை, ஷாஜகான் படங்களை எல்லாம் அப்படி ரசித்து பார்த்துள்ளேன். விஜய் படங்களிலேயே ரொம்ப பிடித்தப் படம் ஆல் டைம் ஃபேவரைட் படம் என்றால் அது கில்லி படம் தான்.

#image_title
ஒருமுறை பாண்டிச்சேரியில் 20 நண்பர்களுடன் கூட்டமாக தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்திற்கு சென்றிருந்தோம். முதல் 15 நிமிடங்கள் பீஸ்ட் படத்தை பார்த்து ஒவ்வொரு காட்சிக்கும் செம ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், 15 நிமிடத்திற்கு மேல் படம் போன போக்கை பார்த்து நாங்கள் அப்படியே அமைதியாக தூங்கிவிட்டோம்” என கூறியுள்ளார்.
இதை கேட்டு உச்சக்கட்ட கடுப்பில் இருக்கும் விஜய் ரசிகர்கள் தற்போது அதிதி பாலனை வறுத்தெடுத்து வருகிறார்கள். மேலும் அவரை டிரோல் செய்தும் விமர்சித்தும் வரும் ரசிகர்கள் ஒரு நடிகையாக இருந்து கொண்டு சக நடிகரின் படத்தை இப்படி விமர்சிக்கலாமா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.