Cinema
வாழை படத்தை ஆபாச படத்தோடு ஒப்பிட்டபிரபல எழுத்தாளர்….!!! வெடித்தது புதிய சர்ச்சை….
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள வாழை படத்தை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் இந்த படத்தை ஆபாச படம் என பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா விமர்சனம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “எட்டாம் வகுப்பு மாணவனான சிவனைந்தனும் பூங்கொடி டீச்சரும் வரும் காட்சிகள் அனைத்திலுமே பாலியல் சமிக்ஞைகள் படு தீவிரமாக உணர்த்தப்படுகின்றன. தாய்லாந்தில் லைவ் ஷோ என்ற பெயரில் ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வார்கள். அதை பலரும் கண்டு களிப்பார்கள். அப்படித்தான் வாழை படத்தில் வரும் பூங்கொடி டீச்சர், மாணவன் சிவனந்தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் உள்ளன. தாய்லாந்தில் நடக்கும் லைவ் ஷோவின் சாஃப்ட் வெர்ஷனாக வாழை உள்ளது” என இது ஒரு ஆபாச படம் தான் என்று ஆணித்தனமாக கூறியுள்ளார். அவரின் இந்த கருத்தை கேட்ட பலரும் சாரு நிவேதிதா மொத்த வன்மத்தையும் கொட்டியுள்ளார். எங்களுக்கு இந்த படத்தில் எந்தவித பாலியல் சமிக்ஞைகளும் தெரியவில்லை. ஒருவேளை சாரு நிவேதிதா அந்த எண்ணத்தோடு பார்த்ததால் அப்படி தெரிந்திருக்கலாம் என பதிலடி கொடுத்து வருகிறார்கள்.