
Television
இதனால் தான் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகினேன்…. விஷால் கூறிய காரணம்…!!!
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கி உள்ளது. இதில் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரில் நடித்த விஜே விஷால் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இந்நிலையில் தான் எதற்காக பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகினேன் என்பதை விஜய் சேதுபதி முன்பாக விஷால் கூறியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் கனவு. அதனால் தான் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகினேன். ஆனால் சினிமாவிற்கு முயற்சி செய்யும்போது பாக்கியலட்சுமி சீரியல் எழில் கேரக்டர் போலவே எனக்கு வாய்ப்பு கிடைத்தது. உண்மையில் எழில் கேரக்டர் போல என்னுடைய நிஜ கேரக்டர் கிடையாது. என் கேரக்டரே வேறு. அதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன்” என கூறியுள்ளார். அதனை கேட்ட விஜய் சேதுபதி அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, முத்தம் கொடுத்து வீட்டிற்குள் வழியனுப்பி வைத்தார்.