Cinema
இளையராஜாவுக்கு ஆதரவாக பொங்கிய பயில்வான்…. வைரமுத்துவை விளாசிய சம்பவம்…!!!!
தமிழ் சினிமாவின் இசைஞானி என்று அழைக்கப்படுபம் இளையராஜாவின் இசையில் உருவான பல பாடல்கள் பலரின் விருப்பமான பாடல்களாக உள்ளன. 90ஸ் கிட்ஸ் தொடங்கி 2கே கிட்ஸ் வரை இளையராஜாவின் பாடல்களுக்கு ரசிகர்களாக உள்ளனர்.

#image_title
அதனால் தானோ என்னவோ இளையராஜா தன் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் தனக்கு மட்டுமே சொந்தம். அதை மேடை நிகழ்ச்சியில் அல்லது வேறு எங்காவது பயன்படுத்த நினைத்தால் தன்னிடம் முறையான அனுமதி பெற்று காப்புரிமை வாங்க வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதுமட்டுமல்ல தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாக உள்ள கூலி படத்தின் அறிமுக டீசர் வீடியோ சமீபத்தில் வெளியானது. அதில் இளையராஜாவின் பாடலை அவர் அனுமதி இல்லாமலே பயன்படுத்தி உள்ளனர். இதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

#image_title
தன்னிடம் முறையாக உரிமை பெற வேண்டும் அப்படி இல்லை என்றால் தன் பாடலை அந்த வீடியோவில் இருந்து நீக்க வேண்டுமென அந்த நோட்டீஸில் இளையராஜா குறிப்பிட்டுள்ளார். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் பயில்வான் ரங்கநாதன் இசைஞானி இளையராஜாவிற்கு ஆதரவாக பேசியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “இளையராஜா தரப்பில் தான் நியாயம் உள்ளது. காப்புரிமை வைத்திருக்கும் இளையராஜாவிற்கு பணத்தை கொடுத்துவிட்டு அவரது இசையை பயன்படுத்தி இருக்க வேண்டும்.

#image_title
காப்புரிமை வைத்திருப்பவர் கேள்வி எழுப்ப தான் செய்வார். இதில் இளையராஜா மீது எந்த ஒரு தவறும் இல்லை. வாழ்க்கை கொடுத்த இளையராஜா குறித்து வைரமுத்து பேசாமல் இருப்பது தான் அவருக்கு நல்லது. அதை விட்டு மொழி பெரியதா இசைப் பெரியதா என பேசுவது நன்றி கெட்ட செயல்” விமர்சித்துள்ளார்.