
Cinema
பையனை கூட விட்டு வைக்க மாட்டார்…. அவர் மனைவியும் உடந்தை… ஜானி மாஸ்டர் குறித்து பகீர் கிளப்பிய பிரபலம்….!!!
தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடன இயக்குனராக வலம் வரும் ஜானி மாஸ்டர் சமீபத்தில் பாலியல் புகாரில் சிக்கி கைதானார். இந்நிலையில் இதுகுறித்து பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ள செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. அதன்படி அவர் கூறியதாவது, “7 வருடங்களுக்கு முன்பு சிறுமி ஒருவர் ஜானி மாஸ்டரிடம் நடனம் பயின்றார். அந்த சிறுமி இளம்பெண் ஆனவுடன் ஜானி மாஸ்டர் தனது சேட்டைகளை ஆரம்பித்தார். ஜானியின் மனைவியே அந்த பெண்ணிடம் சென்று தனது கணவனை திருமணம் செய்துகொள். அவருக்கு வேண்டியபடி இணக்கமாக இரு என்று கூறியிருக்கிறார். இந்த சூழலில் தான் ஜானி மாஸ்டர் குறித்து காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் கொடுத்தார். அவர்களும் ஜானியை கைது செய்துவிட்டனர். ஜானி மாஸ்டருக்கு இது ஒன்றும் புதிது கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பையனை இதேபோன்று டார்ச்சர் செய்தார். அப்போது அந்த பையன் அளித்த புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்” என கூறியுள்ளார்.
கணவரிடம் இணக்கமாக இரு.. ஜானி மாஸ்டரின் மனைவியே அப்படி சொன்னாரா?.. புதுசா கெளம்புதே