Television
ராமமூர்த்தி சொன்ன அந்த வார்த்தை… கோபிக்கு பதிலடி கொடுத்த பாக்கியா….!!!!
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தியின் சதாபிஷேக விழாவில் பங்கேற்ற கோபியை அனைவரும் அசிங்கப்படுத்தி அனுப்புகிறார்கள். இதனால் மனமுடைந்த கோபி தனது அம்மா ஈஸ்வரியிடம் தனியாக பேசி சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். ஆனால் ஈஸ்வரி கோபியை கண்டமேனிக்கு திட்டி அனுப்பி விடுகிறார்.

#image_title
அந்த சமயத்தில் அங்கு வரும் ராமமூர்த்தி என்ன உன்கிட்ட தனியா பேசி மனச மாத்த முயற்சி பண்றானா என கேட்கிறார். உடனே ஆமாங்க கண்ணீர் விட்டு அழுதா நான் மனசு மாறிடுவேன்னு நினைக்கிறான். ஆனா அந்த ஈஸ்வரி இப்போ இல்லன்னு அவனுக்கு புரியல என கூறுகிறார். உடனே ராமமூர்த்தி ஈஸ்வரியை அங்கிருந்து அழைத்து செல்கிறார்.

#image_title
அப்போது நாளைக்கே எனக்கு எதாவது ஒன்னு ஆச்சுன்னா அவன் எனக்கு கொள்ளி போடக்கூடாது என கூறுகிறார். அதைகேட்ட ஈஸ்வரி ஷாக்காகி ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க என கூறுகிறார். பின் குடும்பமாக அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்து கோபி கொஞ்சம் வருத்தப்படுகிறார்.

#image_title
அந்த சமயத்தில் பாக்கியா பாயாசம் எடுக்க வருகிறார். அப்போது அங்கு வரும் கோபி நான் என் வீட்ல ராஜா மாதிரி இருந்தேன். ஆனா இப்போ என் குடும்பமே என்னை மதிக்க மாட்டேங்குறாங்க. இதுக்கெல்லாம் நீதான் காரணம் என கோபமாக பேசுகிறார். அதற்கு பாக்கியா கடைசி வரைக்கும் உங்க தப்ப நீங்க உணரவே மாட்டீங்க. யாரையும் பிரிக்கனும்ங்கிற அவசியம் எனக்கில்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.