Television
குழந்தை விஷயத்தில் உறுதியாக இருக்கும் ராதிகா…. உடைந்துபோய் உட்கார்ந்த ஈஸ்வரி….!!!!
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகாவிடம் இந்த வயசுல குழந்தை தேவையானு யோசிச்சு பாரு. கோபிக்கு மூனு பிள்ளைங்க இருக்காங்க உனக்கும் பொண்ணு இருக்கா. நீங்க இந்த வீட்ல தான் இருக்கீங்க நாளைக்கே இனியாவுக்கு மாப்பிள்ளை பார்த்தா மாப்பிள்ளை வீட்ல உன்னை பார்த்தா என்ன நினைப்பாங்க?

#image_title
இதைபத்தியெல்லாம் நீ யோசிக்கவே மாட்டியா? என்று ஈஸ்வரி கேட்க. அதை பத்தியெல்லாம் நான் ஏன் யோசிக்கனும் என்று ராதிகா பதிலடி கொடுக்கிறார். மேலும் நீங்க அமிர்தா கிட்ட என்ன சொன்னீங்க உனக்கும் எழிலுக்கும் ஒரு பிடிப்பு வேணும் அதுக்காக குழந்தை பெத்துக்கோனு சொன்னீங்க. அதே மாதிரி எனக்கும் கோபிக்கும் ஒரு பிடிப்பு வேணும்.
நான் நிச்சயமா இந்த குழந்தைய பெத்துக்க தான் போறேன் என்று கூறி விடுகிறார். அதை கேட்டு ஷாக்காகும் ஈஸ்வரி உடைந்துபோய் ரூமை விட்டு வெளியே வருகிறார். அப்போது ராதிகா முறைக்க கோபியும் ஈஸ்வரி பின்னால் வெளியே ஓடி விடுகிறார். உடனே ஈஸ்வரி நீ போய் உன் பொண்டாட்டி முந்தானைய புடிச்சுட்டு சுத்து என்று திட்டுகிறார்.

#image_title
பின் சோகமாக இருக்கும் ஈஸ்வரியை பார்த்த பாக்கியா ராதிகா கர்ப்பமா இருக்குற விஷயம் உங்களுக்கு தெரிஞ்சிருச்சா? அதான் ஒரு மாதிரி இருக்கீங்களா? என்று கேட்க உனக்கு எப்படி தெரியும் என்று ஈஸ்வரி கேட்கிறார். அதற்கு பாக்கியா நான் மூனு புள்ளை பெத்தவ. ஒருத்தரோட நடவடிக்கைய பார்த்து அவங்க கர்ப்பமா இல்லையானு எனக்கு தெரியாதா? என்று கூறுகிறார்.

#image_title
இதையெல்லாம் கேட்டு கொண்டிருக்கும் செல்வி ஷாக்காக பின்னர் பாக்கியா மாடியில் துணி காயப்போடும்போது நிஜமாவே ராதிகா கர்ப்பமா இருக்கா என்று செல்வி கேட்கிறார். அதற்கு பாக்கியா ஆமாம் என்று சொல்ல எப்படிக்கா உன்னால இதை தாங்கிக்க முடியுது என்று கேட்கிறார். உடனே பாக்கியா அவருக்கும் எனக்கும் எதுவும் இல்லனு முடிவாகிடுச்சு. அவரு யாரோ நான் யாரோ என்று கூறுகிறார்.