Television
இனியா கேட்ட கேள்வியால் ஆடிப்போன கோபி…. இறுதிச்சடங்கு செய்யும் பாக்கியா….!!!
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட் முழுவதும் சண்டை தான் நடக்கிறது. கோபி தன் அப்பாவுக்கு தான் தான் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என்று கூற ஈஸ்வரி முடியவே முடியாது என்று பிடிவாதமாக இருக்கிறார். என்னோட முடிவுல யாருக்கு விருப்பம் இருக்கோ அவங்க மட்டும் இங்க இருங்க மத்தவங்க வெளிய போங்க.

#image_title
நான் தனி ஆளா நின்னு என் புருஷன் ஆசைப்படி அவருக்கு இறுதிச்சடங்கு செஞ்சுக்கிறேன் என ஈஸ்வரி கூறி விடுகிறார். அதை கேட்டு கோபி சண்டை போட ராதிகா மற்றும் கமலா ஆகிய இருவரும் கோபிக்காக வக்காளத்து வாங்குகிறார்கள். இதை பார்த்த இனியா கோபியிடம் அப்பா தயவு செஞ்சு விட்டு கொடுத்துடுங்க. தாத்தாவுக்கு இப்படி சண்டை போட்டா பிடிக்காது என கையெடுத்து கும்பிட்டு கேட்கிறார். அதை பார்த்து கோபி அமைதியாகிறார்.

#image_title
பின் கோபி இறுதிச்சடங்கு செய்யலைனா இதையெல்லாம் யார் செய்வாங்க என ராதிகா கேள்வி எழுப்புகிறார். அதற்கு ஈஸ்வரி என் மகள் பாக்கியா செய்வா. பெத்த புள்ளை எங்கள விட்டு போனாலும் எங்களுக்கு மகளா இருந்து எங்கள பார்த்துக்கிட்டது பாக்கியா தான். அதனால அவதான் என் புருஷனுக்கு கொள்ளிப்போடுவா என கூறுகிறார்.

#image_title
மேலும் பாக்கியாவிடம் உன் மாமா ஆத்மா சாந்தி அடையனும்னா நீதான் அவருக்கு இறுதிச்சடங்கு செய்யனும் என ஈஸ்வரி சொல்ல வேறு வழியில்லாமல் பாக்கியா சடங்குகளை செய்ய தயாராகிறார். இப்படி இந்த வாரம் முழுக்க ஒரே அழுகையாக பாக்கியலட்சுமி சீரியல் நகர்கிறது.