
Television
பாக்கியா ரெஸ்டாரெண்ட்டில் வெடித்த பிரச்சனை…. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் கோபி…!!!
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா பிசியாக இருக்க கோபி செட் செய்த செஃப்க்கு போன் செய்து எப்படி போயிட்டு இருக்கு வேலை என்று கேட்கிறார். அதற்கு அந்த செஃப் இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க பிரச்னை ஆரம்பிச்சிடும் என்று சொல்ல அதை கேட்ட கோபி அந்த கண்கொள்ளா காட்சியை நேரில் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்.

#image_title
அடுத்ததாக கஸ்டமர் ஒருவர் வந்து இந்த பிரியாணியை சாப்பிட்டு என் பொண்ணு வாந்தி எடுத்துட்டு இருக்கா சிக்கன்ல ஸ்மல் அதிகமா வருது என்று கூறி புகார் சொல்கிறார். பாக்கியா அப்படியெல்லாம் இருக்காது என்று கூற ஒவ்வொருவராக வந்து பிரியாணியை தூக்கி எறிந்து பிரச்சனை செய்கிறார்கள். அதை பார்த்து அந்த செஃப் சந்தோசப்படுகிறார்.

#image_title
இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் பாக்கியா இருக்க அதை ரெக்கார்ட் செய்து கோபிக்கு அனுப்பி வைக்கிறார் செஃப். அதை பார்த்த செல்வி இங்க எவ்வளவு பெரிய பிரச்சனை போயிட்டு இருக்கு. நீங்க இங்க என்ன பண்றீங்க? நீங்க தான வந்து பேசனும் என்று சொல்கிறார். அது நம்ம கடை பிரியாணியா இருக்காது என்று சொல்லி மழுப்புகிறார்.

#image_title
அந்த நேரத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு வர அதற்குள் செய்தி டிவியில் வந்து விடுகிறது. அதை பார்த்து ஷாக்காகும் ஈஸ்வரி செழியன் மற்றும் அமிர்தாவை அழைத்து கொண்டு ரெஸ்டாரெண்ட் செல்கிறார். இவை அனைத்தையும் டிவியில் பார்த்து கோபி சந்தோசப்படுகிறார்.