Television
ராதிகா கர்ப்ப விஷயத்தை சொல்ல துடிக்கும் கோபி….. வீட்டை விட்டு வெளியே அனுப்ப திட்டம்போடும் பாக்கியா….!!!!
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் நம்மளும் குழந்தை பெத்துக்கலாம் என அமிர்தா கேட்க எழிலோ எனக்கு கொஞ்சம் கடமைகள் இருக்கு. அதை முடிச்சிட்டு நம்ம குழந்தை பெத்துக்கலாம் என்று கூறுகிறார். பின் வீட்டிற்கு வரும் கோபி ராதிகாவிடம் சாப்பிட்டியா என்று கேட்க இல்லை என்கிறார்.

#image_title
பதிலுக்கு ராதிகா கேட்க நான் நல்ல சாப்பிட்டேன் என்று கூறுகிறார். உடனே ராதிகா அதானே உங்களுக்கு உங்களை பத்தி மட்டும் தான கவலை என்று சண்டை போடுகிறார். பின் கோபி ராதிகாவை சமாதானம் செய்ய குழந்தைக்கு கிஃப்ட் வாங்கியாச்சா என்று ராதிகா கேட்கிறார்.
அதற்கு கோபி நீ சொன்ன மாதிரி செயினும் வளையலும் வாங்கி விட்டேன். நாளைக்கு மட்டும் நீ வாந்தி எடுக்காமல் இருக்கனும் என்று கோபி சொல்ல நான் மட்டும் என்ன வேணும்னேவா வாந்தி எடுக்குறேன் என்று கூறுகிறார்.

#image_title
பின் எப்போதான் வீட்ல சொல்ல போறீங்க என்று ராதிகா கேட்க நாளைக்கு பங்கஷன் முடிஞ்சதும் சொல்லுறேன் என்று கோபி கூறுகிறார். மற்றொருபுறம் அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் அடுத்த நாள் பங்கஷனுக்காக பாக்கியா காய்கறிகளை வெட்டி வைத்து கொண்டிருக்கிறார்.
அப்போது அங்கு வரும் எழில் மற்றும் அமிர்தா பாக்கியாவிற்கு உதவி செய்கின்றனர். அந்த சமயத்தில் உங்க அப்பா ஏன் இன்னும் இங்க இருக்காரு என்று பாக்கியா எழிலிடம் கேட்க அவரும் ஆமா வீட்டை வித்ததுக்கு அப்பறமும் ஓனர் தங்குறதெல்லாம் இங்க தான் நடக்கும் என்கிறார்.

#image_title
பின்பு நாளை பங்கஷன் முடிஞ்சதும் இதுகுறித்து பேசலாம் என்கிறார். மறுநாள் பங்கஷனுக்கான வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஜெனியின் அம்மாவும் அப்பாவும் அங்கு வர ஈஸ்வரி மூஞ்சியை திருப்பி கொள்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.