Television
ராதிகா கர்ப்பம் குறித்து பேச முயன்ற கோபி…. அசிங்கப்படுத்திய இனியா…!!!
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் எப்போதான் ராதிகா கர்ப்பத்தை பத்தி வீட்ல சொல்லுவீங்க என்பதுபோல பார்வையாளர்களே கடுப்பாகிட்டாங்க. அந்த அளவிற்கு இந்த விஷயத்தை ஜவ்வாக இழுத்து கொண்டிருக்கிறார்கள். கோபியும் இதை ஈஸ்வரியிடம் சொல்வதாக தெரியவில்லை.

#image_title
அதன்படி இன்றைய எபிசோடில் எப்படியாவது அம்மாவிடம் சொல்ல வேண்டுமென கோபி சென்று ஈஸ்வரியை வாம்மா கார்ல ஒரு ரவுண்டு போய்ட்டு வரலாம். உன்கிட்ட கொஞ்சம் பேசனும் என்கிறார். உடனே ராமமூர்த்தி மற்றும் இனியா இருவரும் எங்க போறீங்க என்று கேட்கிறார்கள்.
அந்த சமயத்தில் ஈஸ்வரிக்கு போன் வர ஜெனி குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சி குறித்து சொல்கிறார். அதை கேட்டு கோபி ஷாக்காகிறார். என்கிட்ட சொல்லவே இல்லனு கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி உன்கிட்ட சொல்லிட்டேன் நினைச்சேன் என்று கூற அப்படினா இப்போதைக்கு ராதிகா விஷயத்தை சொல்ல முடியாது என கோபி மனதிற்குள் நினைத்து கொள்கிறார்.

#image_title
பின் இனியாவை காரில் அழைத்து சென்று அவரிடம் ராதிகா கர்ப்பம் குறித்து பேச முயல்கிறார். அப்போது இனியாவிடம் உனக்கு தங்கச்சி பாப்பா இருந்தா எப்படி இருக்கும் என்று கோபி கேட்க இனியாவோ அதெப்படி முடியும்? மயூவை இங்க கூட்டிட்டு வர ப்ளான் பண்றீங்களா? எனக்கு ராதிகா இருக்கறதே பிடிக்கல என கோபப்படுகிறார்.
உடனே கோபி உங்க காலேஜ்ல படிக்கிற யாருக்கும் தம்பியோ தங்கச்சியோ இல்லையா என்று கேட்க ஒரே ஒரு பையனுக்கு மட்டும் 10 வயசு வித்தியாசத்துல தம்பி இருக்கான் என்று இனியா கூறுகிறார். அதற்கு கோபி பையனா பசங்ககிட்ட பார்த்து நடந்துக்கோ என அட்வைஸ் செய்கிறார். உடனே இனியா உங்க அளவுக்கு யாரும் மோசம் இல்லை.

#image_title
நீங்க ராதிகாவ கல்யாணம் பண்ணது மட்டுமில்லாம அவங்கள கூட்டிட்டு வந்து அம்மா முன்னாடியே வாழ்ந்துட்டு இருக்கீங்க. அம்மா எவ்வளவு கஷ்டப்படுவாங்கனு கொஞ்சமாச்சும் யோசிச்சீங்களா? நீங்க மட்டும் சந்தோசமா இருக்கனும். இதுல ரொம்ப நல்ல டேடினு வேற சொல்லிக்குறீங்க? என்று அசிங்கப்படுத்தி விடுகிறார்.