
Cinema
பிக்பாஸ் வீட்டில் நடந்த பிரச்சனை…. சம்பளத்தை விட்டுக்கொடுக்க முன்வந்த கமல்… விக்ரமன் கூறிய ரகசியம்….!!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் விக்ரமன். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பொதுவெளியில் தலைகாட்டாமல் இருக்கும் விக்ரமன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கமல் குறித்து பேசியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “ஒருமுறை பிக் பாஸ் வீட்டிற்குள் சாப்பாடு பிரச்சனை வந்தது. அப்போது கமல்ஹாசன் சேனல் தரப்பினரிடம் என்னுடைய சம்பளத்தை வேண்டுமென்றால் குறைத்துக் கொண்டு அந்த பணத்தில் இருந்து இவர்களுக்கு சரியான சாப்பாடு கொடுங்கள். எல்லோரும் வேலை பார்ப்பது சாப்பிடுவதற்கு தான். அந்த சாப்பாடு அவர்களுக்கு பஞ்சம் இல்லாமல் கொடுங்கள் என்று சொன்னார். வேறு யாரேனும் இப்படி சொல்வார்களா என்றால் எனக்கு தெரியாது. விஜய் சேதுபதி வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். அவர் இந்த நிகழ்ச்சியில் எப்படி நடந்து கொள்ள போகிறார் என்பது அவருடைய நடவடிக்கையை பார்த்த பின்னர் தான் தெரியும்” என கூறியுள்ளார்.