
General
வினேஷ் போகத் காங்கிரஸை அழித்து விடுவார்…. பாஜக முன்னாள் எம்பி பேச்சால் சர்ச்சை….!!!!
ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தாலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார். அதன்படி வினேஷ் போகத் அவரை எதிர்த்து போட்டியிட்ட யோகேஷ் குமாரை 6015 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

#image_title
இந்நிலையில் வினேஷ் போகத்தின் வெற்றி குறித்து முன்னாள் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் கூறியுள்ள சில விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. அதன்படி அவர் கூறியதாவது, “அவர் வென்றுள்ளாரா ரொம்ப சந்தோஷம். அதில் எனக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை. ஆனால், ஒன்று வினேஷ் போகத் எங்கு சென்றாலும் அழிவு ஏற்படும்.
வேறு எதுவும் மிச்சம் இருக்காத அளவுக்கு அழிவு ஏற்படும். இப்போது கூட பார்த்தீர்களா? காங்கிரஸ் அழிந்துவிட்டது. அவர் முதலில் மல்யுத்த வீரர்களிடையே பேரழிவை ஏற்படுத்தினார். இப்போது காங்கிரஸ் கட்சிக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளார்” என கூறியுள்ளார்.

#image_title
முன்னதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரார்கள் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக தான் போராட்டம் நடத்தினார்கள். அதன் காரணமாக தான் அவர் இப்படியெல்லாம் பேசுகிறார் என்று பலரும் கூறி வருகிறார்கள்.