
General
கிருத்திகா உதயநிதி பெயரில் வெடிகுண்டு மிரட்டல்…. சென்னையில் பதற்றம்…!!!
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும் இயக்குனருமான கிருத்திகா உதயநிதி பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருத்திகா உதயநிதி தமிழில் வணக்கம் சென்னை உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் இவரது பெயரில் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியில் நடத்திய சோதனையில் அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இருப்பினும் கிருத்திகா உதயநிதி பெயரில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.