Cinema
சினிமாவிற்கு வருவதற்கு முன்பு ஸ்போர்ட்ஸில் சாதித்த பிரபலங்கள்… யார் யார் தெரியுமா…???
இந்திய திரையுலகில் தற்போது டாப் ஹீரோ மற்றும் ஹீரோயின்களாக ஜொலிக்கும் பிரபலங்களில் சிலர் நடிக்க வருவதற்கு முன்பு விளையாட்டில் சாதித்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர் நடிகை ஜெனிலியா. இவர் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நிறைய படங்களில் நடித்து திறமையான நடிகையாக வலம் வருகிறார். ஆனால் இளம் வயதில் சிறந்த தடகள வீராங்கனையாக இருந்துள்ளார். இதற்காக நிறைய பதக்கங்களையும் வென்றுள்ளார். அதேபோல பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் சிறந்த பேட்மிண்டன் பிளேயராக இருந்துள்ளார். அதுமட்டுமல்ல இவர் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தவிர தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வரும் யோகி பாபு கிரிக்கெட் மற்றும் ஃபுட் பால் பிளேயர் என்பது குறிப்பிடத்தக்கது.