General
பசு கடத்தியதாக கூறி 12ஆம் வகுப்பு மாணவன் கொலை…. பசு காவலர்கள் வெறித்தனம்….!!!
ஹரியானா மாநிலம் ஃபரிதாபத் பகுதியில் பசு கடத்தியதாக கூறி 12 ஆம் வகுப்பு மாணவனை பசு பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆர்யன் மிஸ்ரா என்ற 19 வயது மாணவர் சமீபத்தில் தனது நண்பர்களுடன் காரில் வெளியே சென்றுள்ளார். அப்போது பசு பாதுகாவலர்கள் சிலருக்கு எஜ்யுவி கார்களில் பசு கடத்தல்காரர்கள் செல்வதாக தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து மாணவரின் காரை பசு பாதுகாவலர்கள் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். ஆயுதங்களுடன் கும்பல் ஒன்று தங்களை பின்தொடர்வதை பார்த்த மாணவர்கள் பயத்தில் வேகமாக சென்றுள்ளனர். அப்போது இவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாணவர் ஆர்யன் மிஸ்ரா மீது குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக அனில் கௌசிக், வருண், கிருஷ்ணா, ஆதேஷ் மற்றும் சவுரவ் என்ற நான்குபேரை கைது செய்துள்ளதாக ஃபரிதாபாத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.