Connect with us
   

Cinema

பெண்களுக்கு கோட் படத்தின் டிக்கெட் இலவசம்….. விஜய் ரசிகர்கள் அதிரடி…!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படம் தமிழகம் முழுவதும் நாளை திரையரங்குகளில் சோலோவாக வெளியாக உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு விஜய்யின் இந்த படம் தான் அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. விஜய் ரசிகர்கள் பலரும் அடித்து பிடித்து முதல் நாளே படத்தை பார்க்க வேண்டுமென டிக்கெட் வாங்கி வருகிறார்கள். இந்நிலையில் கும்பகோணம் பகுதியில் உள்ள விஜய் ரசிகர்கள் நற்பணி இயக்கம் மூலம் மகளிருக்கு தி கோட் படத்தின் டிக்கெட்டை இலவசமாக வழங்கியுள்ளனர். இதுதொடர்பான செய்திகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. முன்னதாக திமுக அமைச்சர் அன்பரசன் நடிகர்கள் அவர்களின் ரசிகர்களுக்கு டிக்கெட்டை இலவசமாக தருவார்களா? 2000 ரூபாய்க்கு டிக்கெட் விற்கும் இவர்கள் எப்படி நாட்டை காப்பாற்றுவார்கள் என மறைமுகமாக விஜய்யை விமர்சித்திருந்தார். எனவே அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது அவரின் ரசிகர்கள் டிக்கெட்டை இலவசமாக கொடுத்து அசத்தியுள்ளனர்.

Continue Reading

More in Cinema

To Top