Connect with us
   

Cinema

அப்பா இறப்புக்கு கூட செல்லாமல் நடித்தது ஏன்….??? விளக்கம் அளித்த பிரபல நடிகை….!!!!

தமிழ் சினிமாவில் பெண் காமெடி நடிகைகள் மிகவும் குறைவு. ஆச்சி மனோரமா தான் முதன் முதலில் பெண் காமெடி நடிகையாக தமிழில் கலக்கியவர். அவருக்கு அடுத்ததாக கோவை சரளா மனோரமாவின் இடத்தை கொஞ்சம் நிரப்பினார் என்று கூறலாம். இவர் 9 ஆம் வகுப்பு படிக்கும் போதே வெள்ளி ரத்னம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.

#image_title

அதனை தொடர்ந்து முந்தானை முடிச்சு, சதி லீலாவதி, வரவு எட்டணா செலவு பத்தனா போன்ற படங்கள் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படங்கள் என்று கூறலாம். கோவை சரளாவின் வளர்ச்சி இந்த அளவிற்கு இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

தற்போது 62 வயதாகும் கோவை சரளா திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருகிறார். இப்போதும் தமிழ் சினிமாவில் அம்மா மற்றும் பாட்டி போன்ற வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் ஒரு விஷயத்தை கோவை சரளா பகிர்ந்துள்ளார்.

#image_title

அதாவது ஒருமுறை படப்பிடிப்பிற்காக கோவை சரளா ஊட்டி சென்ற சமயத்தில் அவரின் அப்பா இறந்து விட்டாராம். ஆனால் அப்பா இறந்த செய்தி கேட்டும் கோவை சரளா அப்பாவின் இறப்பிற்கு செல்லாமல் தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்றாராம். அதனால் அவர் பணத்திற்காக தான் அப்படி செய்தார் என அனைவரும் கூறினார்களாம்.

ஆனால் உண்மையில் கோவை சரளா ஏன் அப்படி செய்தார் என்றால், அவர் நடித்து கொண்டிருந்த படத்தை ஒரு சிறிய தயாரிப்பு நிறுவனம் தான் தயாரித்து வந்ததாம். எனவே கோவை சரளா பாதியில் சென்றால் அவர்களுக்கு பெரியளவில் நஷ்டம் ஏற்படுமாம். அதை மனதில் வைத்துதான் அப்படி செய்ததாக கூறியுள்ளார்.

Continue Reading

More in Cinema

To Top