
General
பாசம் இல்ல சீன் போடவே மகளை சந்தித்தார்… ஷமி மனைவி குற்றச்சாட்டு…!!!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான் முகமது ஷமி அவரது மனைவி ஹாசின் ஜஹான் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது மகளை சந்தித்த முகமது ஷமி அவருடன் ஷாப்பிங் சென்ற வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவு செய்து நெகிழ்ந்திருந்தார். இதனை விமர்சித்துள்ள ஷமியின் மனைவி, “எனது மகள் பாஸ்போர்ட்டின் காலம் முடிவடைந்து விட்டது. எனவே புதிய பாஸ்போர்ட்க்கு ஷமியின் கையெழுத்து தேவை என்பதற்காகவே தந்தையை சந்தித்தார். ஆனால் ஷமி கையெழுத்து போடாமல் மாறாக எனது மகளை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் மாலுக்கு சென்றுள்ளார். அதுவும் அந்த கடையில் எது வாங்கினாலும் அவருக்கு இலவசம் என்பதாலேயே என் மகளை அங்கு அழைத்து சென்றுள்ளார். எனது மகள் விரும்பியதை வாங்கித் தராமல் அவருக்கு எது இலவசமாக கிடைக்கிறதோ அதை மட்டுமே வாங்கி கொடுத்து உலகத்திற்கு முன்பாக ஷமி சீன் காட்டியிருக்கிறார்” என கூறியுள்ளார்.