Cinema
இளம் பெண் அளித்த பாலியல் புகார்… அதிரடியாக கைது செய்யப்பட்ட பிரபல நடன இயக்குனர்….!!!!
தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடன இயக்குனராக வலம் வந்தவர் தான் ஜானி மாஸ்டர். இவர் தெலுங்கு தவிர தமிழிலும் பல படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். குறிப்பாக விஜய்யின் பீஸ்ட், ரஜினியின் ஜெயிலர் மற்றும் தனுஷின் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களுக்கு இவர் தான் கொரியோகிராபி செய்தார். இதில் திருச்சிற்றம்பலம் படத்திற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான் 21 வயது இளம் பெண் ஒருவர் ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டரை தற்போது பெங்களூரில் வைத்து கைது செய்துள்ளனர். அவரை ஹைதராபாத் அழைத்து செல்லும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.