General
பள்ளி மாணவிகளை சீரழித்த சிவராமன் உயிரிழப்பு…. நடந்தது என்ன…???
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் நடந்த என்சிசி முகாமில் அதே பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் பங்கேற்றனர். இதில் 8 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை என்சிசி பயிற்சியாளரும் முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சிவராமன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த மாணவி தவிர 13 மாணவிகளுக்கு இவர் பாலியல் தொல்லை அளித்ததும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சிவராமன் கைதுக்கு முன்பாக தற்கொலை முயற்சி செய்துள்ளார். அப்போது எலி போஸ்ட் சாப்பிட்ட நிலையில், மருத்துவமனையில் சிவராமன் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று சிவராமன் உயிரிழந்தார். இதே சமயத்தில் சிவராமனின் தந்தையும் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார். ஒரே நேரத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.