General
பாராலிம்பிக்கில் சாதனை படைத்த வீராங்கனை….. யார் இந்த தீப்தி…???
பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் தொடரில் இதுவரை இந்தியா 20 பதக்கங்களை வென்றுள்ளது. அதிலும் கடந்த 3ஆம் தேதி மட்டும் இந்திய தடகள வீரர்கள் மொத்தம் 5 பதக்கங்களை வென்று டோக்கியோ சாதனையை முறியடித்தனர். இந்த சாதனையில் தெலுங்கானாவை சேர்ந்த தீப்தி ஜீவன்ஜியும் முக்கிய பங்காற்றியுள்ளார். இவர் பெண்களுக்கான டி20 பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். மனநலம் குன்றிய வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த பிரிவில் 20 வயதான தீப்தி பதக்கம் வென்றது அவ்வளவு எளிதாக இல்லை. சிறு வயது முதல் பல போராட்டங்கள் மற்றும் தடைகளை தாண்டி தான் தீப்தி இந்த இடத்தை அடைந்துள்ளார். இவரை அவரின் கிராம மக்கள் குரங்கு மற்றும் பைத்தியம் என கிண்டல் செய்துள்ளனர். இருப்பினும் அதையெல்லாம் தாண்டி இன்று தீப்தி ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தி முன்னுதாரணமாக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.