Cinema
கொட்டுக்காளி படத்தை தியேட்டரில் வெளியிட்டது தவறு…. அமீர் விமர்சனத்தால் ஷாக்கான ரசிகர்கள்..!
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி படம் வெளியாகும் முன்பே பல விருது விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளை வென்று குவித்தது. பலரும் இப்படத்தை புகழ்ந்து பேசிய நிலையில் இயக்குனர் அமீர் மட்டும் எதிராக பேசியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “சிவகார்த்திகேயன் வாழை படத்துடன் கொட்டுக்காளி படத்தை வெளியிட்டது மிகப்பெரிய வன்முறை. விருது விழாக்களுக்கு அனுப்பப்பட வேண்டிய படத்தை கமர்ஷியல் லாபத்திற்காக தியேட்டருக்கு கொண்டு வந்து அந்த படத்தின் இயக்குனரை பலர் வெட்டுவேன், குத்துவேன் என கூறும் அளவிற்கு செய்து விட்டார். நான் இந்த படத்தை தயாரித்திருந்தேன் என்றால் தியேட்டருக்கே கொண்டு வராமல், நேரடியாக ஓடிடியில் விட்டிருப்பேன். ஒரு நல்ல படைப்பாளியின் பெயரை இப்படி பொதுமக்கள் பப்ளிக் விமர்சனம் என்ற பெயரில் கேவலமாக பேசும்படி செய்திருக்கக் கூடாது” என கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது