Cinema
பெண்களை போதைப்பொருள் போல காட்டுவதா…. மாரி செல்வராஜ் காட்டம்… கோட் படத்தை தான் கூறினாரா…???
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள வாழை படம் இதுவரை இல்லாத அளவிற்கு நல்ல வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்து பேசியுள்ள மாரி செல்வராஜ், “வாழை படத்தில் இடம்பெற்ற பழைய பாடலான மஞ்சள் பூசும், தூதுவளைய அரைச்சி போன்ற பாடல்களை என்னால் மறக்கவே முடியாது. பாடல் என்றால் ஒரு ஆண், ஒரு பெண் சேர்ந்து ஆடுவது தான். அது காதல் பாடல். அப்படி இல்லை என்றால் ஒரு குரூப் ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து ஆடினால் அது கொண்டாட்டம். ஆனால், 50 ஆண்கள் முன்னிலையில் ஒரு பெண்ணை ஆட வைப்பது என்ன மாதிரியான ஒரு மனநிலை. அந்த பெண்ணை ஒரு போதைப்பொருள் போல இந்த தமிழ் சினிமா காட்டுவது எவ்வளவு கொடுமை” என கூறியைள்ளார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் மட்ட என்ற பாடலில் நடிகை த்ரிஷா விஜய்யுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டிருப்பார். இதை தான் மாரி செல்வராஜ் கூறியுள்ளாரோ என நெட்டிசன்கள் கொளுத்திப்போட்டு வருகிறார்கள்.