Connect with us
   

Cinema

பழனிக்கு சென்று சேவை பண்ணுங்க… மோகன் ஜி வழக்கில் நீதிமன்றம் அதிரடி….!!!

தமிழில் ருத்ர தாண்டவம், திரெளபதி மற்றும் பாகாசூரன் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் தான் இயக்குனர் மோகன் ஜி. இவர் சமீபத்தில் பழனி கோவிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவை ஏற்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்படுவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இதனை தொடர்ந்து மோகன் ஜி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று இவரின் முன்ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பல்வேறு நிபந்தனைகளுடன் இயக்குனர் மோகன் ஜி க்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. அதன்படி பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதற்காக மோகன் ஜி தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில் தமிழ்நாடு முழுவதும் மன்னிப்பு கேட்டு விளம்பரமாக வெளியிட வேண்டும். பழனி காவல் நிலையத்தில் தினந்தோறும் 3 வாரங்களுக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மேலும் பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்திற்கு சென்று 10 நாட்கள் சேவை செய்யும் நோக்கில் பணியாற்றலாம் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

Continue Reading

More in Cinema

To Top