Cinema
விஜய் தப்பான பாதையில் போகிறார்… பிரபல இயக்குனர் வருத்தம்…!!!
தமிழில் திரெளபதி, ருத்ரதாண்டவம் மற்றும் பகாசூரன் ஆகிய படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் மோகன் ஜி. இவர் நடிகர் விஜய் குறித்து சில விஷயங்களை பேசியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “விஜய்யின் அரசியல் வருகையை நான் அப்போதே வரவேற்றுவிட்டேன். நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல தலைவர் வேண்டும். அதுவும் இளைஞர்களுக்கு பிடித்தவர் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் தான். ஆனால், விஜய் சார் தப்பான ரூட்டில் போவது தான் மிகவும் வருத்தமாக உள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொன்னது வருத்தமாக உள்ளது. விநாயகர் சதுர்த்தி இந்துக்கள் பண்டிகை என்பதால் அதற்கு வாழ்த்து சொன்னால், அது இந்துக்களுக்கு ஆதரவு தெரிவிப்பது போல மாறிவிடும். இதுதவிர மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவிற்கு ஆதரவு அளிப்பது போல, ஒரு தோற்றம் வந்துவிடும் என்பதால் தான் இந்துவாக இருக்கும் பலரும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல பயப்படுகிறார்கள்” என கூறியுள்ளார்.