Cinema
விஜய்யால் பலர் உயிரிழந்துள்ளனர்…. பிரபல இயக்குனர் பகீர் பேட்டி…!!!
நடிகர் விஜய் குறித்து பிரபல இயக்குனர் பவித்ரன் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி பவித்ரன் கூறியதாவது, “நான் சிறுவயது முதலே விஜய்யை பார்த்து வருகிறேன். அவர் எந்த முடிவெடுத்தாலும் நன்றாக யோசித்து எடுப்பார். அதே நேரத்தில் எஸ் ஏ சந்திரசேகரின் ஒழுக்கமான வளர்ப்பு விஜய்க்கு ஒரு பெரிய பலம். ஆனாலும் இப்போது அவர் சினிமா வேண்டாம் அரசியலுக்கு போகிறேன் கூறியிருப்பது ஏன் என தெரியவில்லை. ஒருவேளை விஜய் அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்றால் அவரை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். விஜய்யின் கால்ஷீட்டுக்காக பலர் காத்திருந்தே இறந்து போய் விட்டார்கள். ஒரு சில ப்ரொடியூசர்கள் விஜய்யால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மக்கள் சேவையை விட கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கும் என்பதற்காக கூட விஜய் அரசியல் வாழ்க்கையை தேர்ந்தெடுத்து இருக்கலாம். ஆனாலும் அவர் அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்றால் அவரால் பாதிக்கப்பட்ட ஒரு நான்கு ப்ரொடியூசர்களுக்கு படம் நடித்து கொடுக்க வேண்டும் என்பது என்னோட ஆசை” என கூறியுள்ளார். இது பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.