Cinema
அஜித்துக்கு அந்த இடத்துல உணர்வே இல்ல…. சுந்தர் சி கூறிய தகவலால் ஷாக்கான ரசிகர்கள்….!!!!
நடிகர் அஜித் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் திரையுலகில் அறிமுகமாகி இன்று உச்ச நட்சத்திரமாக உள்ளார். ஆனால் இவரின் ஆரம்ப கால வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு சந்தோசமாக இல்லை. இவரின் கதையை கேட்டால் அதை வைத்து ஒரு படமே எடுக்கலாம். அந்த அளவிற்கு ஏகப்பட்ட கதைகள் உள்ளது.

#image_title
அஜித் முதன் முதலில் ஒரு தெலுங்கு படத்தில் தான் அறிமுகமானார். ஆனால் அந்த படத்தின் இயக்குனர் திடீரென இறந்து போக அந்த படம் ஓடவில்லை. அதன் பின்னர் தான் அவருக்கு தமிழில் அமராவதி பட வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற அஜித் கொஞ்சம் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து அடுத்தடுத்த காதல் படங்களில் சாக்லேட் பாயாக நடித்து வந்த அஜித் பின்னர் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அஜித் வெறும் நடிகர் மட்டுமல்ல அவர் அடிப்படையில் ஒரு கார் ரேசர். அவருக்கு நடிப்பை விட கார் மற்றும் பைக் ஓட்டுவதில் தான் அலாதி பிரியமே..

#image_title
இப்போதும் கூட பிரேக் கிடைத்தால் போதும் பைக்கை எடுத்து கொண்டு எங்காவது சென்று விடுவார். ஆனால் இதனால் நிறைய விபத்தில் சிக்கியுள்ள அஜித் உடலில் ஏகப்பட்ட அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்த அறுவை சிகிச்சைகளால் அவர் உடலில் பல மாற்றங்கள் நடந்துள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து பிரபல இயக்குனர் சுந்தர் சி ஒரு அதிர்ச்சியான தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “உன்னை தேடி என்ற படத்தில் நடிக்கும்போது முதுகில் செய்த அறுவை சிகிச்சை காரணமாக அஜித்துக்கு கால் பாதத்தில் உணர்வு இல்லாமல் போய்விட்டது.

#image_title
ஒருமுறை சாலக்குடியில் படிப்பிடிப்பு நடந்தது. அப்போது தண்ணீரில் நடந்து செல்ல வேண்டும். தண்ணீர் மிகவும் ஜில்லென இருந்ததால் எங்களால் நடக்கவே முடியவில்லை. ஆனால் அவர் மிகவும் சாதாரணமாக நடந்து சென்றார். நீங்க ஹீரோ தான் அதுக்காக இப்படியா என்று கேட்டேன். உடனே அவர் எனக்கு எதுவுமே தெரியல சார் என்று சிரித்து கொண்டே சொன்னார்” என கூறியுள்ளார்.