Cinema
பிரபல நடிகையால் குஷ்பு வீட்டில் வெடித்த பிரச்சனை…. சுந்தர் சி செய்த தரமான சம்பவம்….!!
சுந்தர் சி தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகர் என வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 4 படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை மேலும் ப்ரமோட் செய்யும் விதமாக சுந்தர் சி பேட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

#image_title
அந்த வகையில் சமீபத்தில் பங்கேற்ற பேட்டி ஒன்றில் சுந்தர் சி சில சுவாரஸ்யமான விஷயங்களை கூறியுள்ளார். அதவாது குஷ்பு கர்ப்பமாக இருந்த சமயத்தில் தனக்கு பெண் குழந்தை பிறந்தால் இந்த பெயரை தான் வைக்க போவதாக சுந்தர் சி யிடம் ஒரு பெயரை கூறியுள்ளார்.
அதை கேட்ட சுந்தர் சி பெயர் ரொம்ப அருமையான இருக்கு என்று கூறிவிட்டு பட வேலைக்காக சென்று விட்டாராம். அந்த சமயத்தில் சுந்தர் சி அஜித் நடித்த உன்னைத் தேடி என்ற படத்தை தான் இயக்கி கொண்டு இருந்தாராம். அந்த படத்திற்கு தேவா இசையமைக்க ஹீரோயின் பெயரில் பாட்டு இருந்தால் நன்றாக இருக்கும் என்று சுந்தர் சி சொன்னாராம்.

#image_title
உடனே தேவா நிறை பெயரில் பாட்டு கம்போஸ் செய்ய எதுவுமே செட்டாகவில்லையாம். உடனே நீங்களே ஒரு நல்ல பேரா சொல்லுங்க என்று சுந்தர் சி யிடம் கேட்க அவரோ குஷ்பு தனக்கு பிறக்கும் போகும் குழந்தைக்காக தேர்வு செய்து வைத்திருந்த மாளவிகா என்ற பெயரை கூறிவிட்டார்.
பெயரை கேட்டதும் அருமையா இருக்கே என்று சொன்ன தேவா உனே மாளவிகா என் மாளவிகா என்ற பாடலை கம்போஸ் செய்துள்ளார். பாட்டும் நல்ல ஹிட்டானது. ஆனால் நான் என் குழந்தைக்காக தேர்வு செய்து வைத்த பெயரை எப்படி அந்த நடிகைக்கு வைக்கலாம் என்று கூறி குஷ்பு பயங்கரமாக சண்டை போட்டாராம். இதை சுந்தர் சி பேட்டியில் கூறியுள்ளார்.