Cinema
என்ன விளையாடுறீங்களா…??? விவேக்குக்கு ஜோடி நானா….??? டென்ஷனான பிரபல நடிகை….!!!!
பிரபல நடிகை தேவிகாவின் ஒரே மகளான கனகா கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான கரகாட்டக்காரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது அழகால் ரசிகர்களை வசீகரித்த கனகா கனவுக்கன்னியாக மாறிவிட்டார்.

#image_title
அதிலும் அந்த படத்தில் கனகாவின் கண்கள் தான் ஹைலைட்டே. அவரின் கண்களுக்கு தனியாக க்ளோஸ் அப் ஷார்ட் ஒன்று வைத்திருப்பார்கள். அதில் தான் அத்தனை ரசிகர்களும் விழுந்து விட்டார்கள் போலும். அந்த படத்தை தொடர்ந்து பிரபல நடிகையாக உயர்ந்த கனகா எட்ட முடியாத உயரத்தை அடைந்தார்.
ஆனால் திடீரென காணாமல் போன கனகா உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியாத அளவிற்கு அவரை தனிமைப்படுத்தி கொண்டார். இப்போது வரை தனியாக வசித்து வரும் கனகா யாரையும் பார்க்க அனுமதிப்பதில்லை. என்ன காரணம் என்பதும் யாருக்கும் தெரியவில்லை.

#image_title
இந்நிலையில் இவர் குறித்து பிரபல இயக்குனர் வி.சேகர் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதன்படி விரலுக்கேத்த வீக்கம் படத்தில் வடிவேலுவுக்கு கோவை சரளாவை ஜோடியாக முடிவு செய்த நிலையில் விவேக்கிற்கு கனகாவை ஜோடியாக போடலாம் என பலரும் கூறியுள்ளனர்.
ஆனால் இயக்குனர் சேகர் யோசித்துள்ளார். ஏனெனில் கனகா அந்த சமயத்தில் மிகப்பெரிய ஹீரோயின் இதனால் தயங்கியபடியே கனகாவின் தாயாருக்கு போன் செய்து பேசியுள்ளனர். அவரும் மற்ற விஷயங்களை பேசி முடித்துள்ளார். இறுதியாக விவேக்குக்கு ஜோடியாக தான் கனகா நடிக்கிறார் என்று கூற இருவரும் ஷாக்காகி உள்ளனர்.

#image_title
மேலும் கனகாவோ என்னது விவேக்குக்கு ஜோடியா நானா? என்ன விளையாடுறீங்களா? அதெல்லாம் முடியாது என்று கூறியுள்ளார். பின் ஒருவழியாக அவரை சமாதானம் செய்து அந்த படத்தில் நடிக்க வைத்தார்களாம்.