Connect with us
   

Cinema

வாரிசுகளின் சங்கமம் கோட்…. வம்பிழுத்த நபருக்கு சரியான பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு….!!!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் கூட்டணியில் உருவாகியுள்ள கோட் படம் வெகு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவருக்கும் கோட் பட இயக்குனருக்கும் பஞ்சாயத்து வெடித்துள்ளது. அதாவது அந்த பயனர் அவரது பதிவில், “எஸ்.ஏ.சி. பையன், தியாகராஜன் பையன், சுந்தரம் மாஸ்டர் பையன், மலேசியா வாசுதேவன் பையன், இளையராஜா பையன், கங்கை அமரன் பையன், கல்பாத்தி அகோரம் பொண்ணு இணைந்து மிரட்டும் கோட்”என பதிவு செய்திருந்தார். அதை பார்த்த வெங்கட் பிரபு, “நன்றி பிரதர்..!! உங்க அப்பா பேர சொல்லுங்க அவருக்கும் நன்றி சொல்றேன்” என பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Continue Reading

More in Cinema

To Top