Connect with us
   

Cinema

கோட் அந்த படத்தோட கதை தான்…. உண்மையை ஒப்புக்கொண்ட வெங்கட் பிரபு…..!!!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிகவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் வெளியான படம் தான். கோட். விஜய் தவிர பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா மற்றும் மைக் மோகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

#image_title

அப்பா மகனை மையமாக வைத்து உருவாகி இருந்த இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். மகன் விஜய் கேரக்டரில் விஜய்யை இளமையாக காட்ட வேண்டும் என்பதற்காக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருந்தார்கள்.

பிரம்மாண்டமாக பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. வசூலும் குறைவாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர கோட் படம் கேப்டன் விஜயகாந்த் நடித்த ராஜதுரை படத்தின் காப்பி என்று நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வந்தனர்.

இருப்பினும் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு இதுகுறித்து வாய் திறக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவர் பங்கேற்ற பேட்டி ஒன்றில் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ஆமாம் ராஜதுரை படத்தின் காப்பி தான் கோட் படம்.

ஆனால் கோட் படம் வெளியான பின்னர் தான் எனக்கே இந்த உண்மை தெரியவந்தது. அனைவரும் கோட் படத்தை விமர்சித்த பின்னர் தான் ராஜதுரை படத்தை பார்த்தேன். முன்பே தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக எடுத்திருப்பேன்” என கூறியுள்ளார்.

Continue Reading

More in Cinema

To Top