
General
உதயநிதி குறித்த கேள்வி… கடுப்பான துரைமுருகன் கோபத்தில் என்ன சொன்னார் தெரியுமா….???
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து பல அரசியல் தலைவர்களும் கருத்து கூறி வருகிறார்கள். அந்த வகையில் திமுக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் இதுகுறித்து நிரூபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதனை கேட்டதும் கோபப்பட்ட துரைமுருகன், “எனக்கு எதுவும் தெரியாது” என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். ஏற்கனவே இளைஞர்களுக்கு சீனியர்கள் வழிவிட வேண்டும் என்ற ரஜினியின் கருத்துக்கு உதயநிதி ஆதரவு தெரிவித்து இருந்தார். மேலும் கட்சியில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் உதயநிதி கூறியிருந்தார். இதனால் துரைமுருகன் மற்றும் உதயநிதி இடையே பிரச்னை நிலவி வருவதாக கூறப்படுகிறது.